App logo

இ(

இனியன் (thilip)

@thilip0071

24

friends

ஈழப்போர் கருணா நிதியை நம்பி நடக்கவில்லை. ஆனால் கருணா நிதி ஈழப்போரில் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தார் அதற்குப் பெயர் தான் துரோகம். இந்தியாவின் போரை தான் தாங்கள் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது இலங்கை. இந்தியாவை அப்போது ஆண்டுகொண்டிருந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி. போரை தடுத்து நிறுத்தும் உயரத்தில் இருந்தது திமுக. காங்கிரஸ் ஒவ்வொரு முடிவையும் கருணாநிதியிடம் தெரிவித்த பின்பே செயல்படுத்தியது. அது தெளிவாக சொல்லிவிட்டது எக்காரணத்தை முன்னிட்டும் போரை நிறுத்த முடியாது என்று, ஆனால் திமுக என்ன சொன்னது போரை நிறுத்த உண்ணாவிரத நாடகமாடியது, போர் நின்றுவிட்டதாக பொய் கூறியது. இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! தமிழக மக்கள் கிளர்ச்சி ஏதும் செய்துவிடாமல் இருக்க முத்துக்குமார் தீக்குளித்து இறந்ததை, காதல் தோல்வி என கதை கட்டி விட்டார். அந்த சவ ஊர்வலம் கூட தன் தெரு வழியாகவோ இல்லை சட்டமன்ற சாலை வழியாகவோ செல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி அவரது உடலை வைத்துக்கொண்டு மக்கள் கிளர்ச்சி செய்வார்களோ என்று பயந்தார். இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! போராடிய வழக்கறிஞர்களை அடித்து உதைத்து பலரது மண்டையை பிளந்தது திமுக. இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! கல்லூரி மாணவர்கள் எங்கே போராடிவிடப்போகிறார்கள் என்று பயந்து கல்லூரிகளுக்கு விடுப்பு கொடுத்து மாணவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு. இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! மக்களை கேளிக்கைகளில் வைத்து மானாட மயிலாடவை ரசித்துக்கொண்டிருந்தது, அங்கு போர் நடப்பதையே தெரியாத வண்ணம் பொதுமக்களை வைத்திருந்தது. இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! இறையாண்மையே இல்லாத போலியான பாசிச இலங்கை அரசிடம் இறையாண்மை இருப்பதாக இங்கு பேசியது திமுக. இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! புலிகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த உணவுப்பொருள்கள், மருந்து, துணி, இரத்த பொட்டலங்கள் உட்பட அனைத்தையும் கிடைக்க விடாமல் செய்தது திமுக அரசு. ஜாபர் சேட் மூலம் அப்படி தயார் செய்து அனுப்ப திட்டமிட்டிருந்த உதவி பொருட்களையும் இரத்த பொட்டலங்களையும் தனது பூட்ஸ் காலால் தரையில் கொட்டி மிதித்து பாழாக்கினார் கருணாநிதியின் உத்தரவின் பேரில். இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! தமிழின தலைவர் என்று சொல்லிக் கொண்டவர் ஈழத்தமிழர்களுக்கும் அவர் தானே தலைவர் ? ஏன் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவ முன்வரவில்லை ? மாறாக பிரபாகரனை எப்படியாவது கொன்று விடுங்கள் என்று மன்றாடியதாக சிவசங்கர மேனன் தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! பிரபாகரன் தலைமையில் ஈழத்தில் ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததாகவும் தமிழர்களுக்கு இரட்டை தலைமை அமைவதை அவர் விரும்பவில்லை என்பதையும் தெரிவிக்கிறார் சிவ சங்கர மேனன். இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்! புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் கப்பல்கள் பலவற்றை தங்கள் ரேடார் மூலம் கண்காணித்து காட்டிக்கொடுத்து