Clubhouse logo

மேவி குமார்

@tanspro

88

friends

'வரலாற்றை படி; வரலாற்றை படை' என்கிற தேசியத் தலைவரின் சொற்களிற்க்கிணங்க உலகத் தமிழர் ஆவண மையம் தொடர்ந்து தமிழர் தம் தொன்மங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வரலாற்று கடமையின்பால் ஆவணப்படுத்தி வருகிறது. உலகத் தமிழர்கள் இந்த வரலாற்று கடமையில் தங்களது பெருபங்களிப்பையும் அளிக்கும் பொருட்டு தங்கள் வசம் இருக்கும் தமிழர்தம் தொன்மங்களையும் வரலாற்றையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கும் புத்தகங்கள், இதழ்கள், ஒலி-ஒளி பதிவுகள், பழங்கால நாணயங்கள், முத்திரைத்தாள்கள், பழங்காலப் பொருட்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் ஈழப்போராட்ட இலக்கியங்கள் தாங்கிய ஆவணங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதியை கொடுத்துதவுமாறு உலகத் தமிழர் ஆவண மையம் அன்புடன் உரிமையுடன் கோருகிறது. -உலகத் தமிழர் ஆவண மையம். தமிழ்நாடு. 8940801205