மெய்பொருள் காண்பதறிவு
@sureshjohn123
1.2K
friends
1.குரல் எழுப்ப முடியாத அல்லது அறியாத சாதாரண மக்களின் பக்கம் நின்று அதிகாரத்திற்கு எடுத்துரைப்பவர்களே எப்போதும் மக்களை முன்னேற்றும் சக்திகளாக இருக்கின்றார்கள்..... 2.சாதிபடிநிலை சிந்தனை ஒழிப்பே,,, சமூக முன்னேற்த்தின் விடியல்கீற்று..... 3.சாதி.. குடிபெருமை என புதுவேடம் இட்டால்.. குடி குடியை கெடுக்கும் ,,, குடிபெருமை சமூகத்தை பிளக்கும் என இடித்துரைப்போம்.. 4.தமிழ் பற்று இல்லாமல் மற்ற மொழிக்கு முட்டுகொடுத்தால் முற்றும் நீ யார் என தோலுரிப்போம்... 5.தெய்வமொழி சமஸ்கிருதம் என தெனாவட்டாய் வந்தால் அய்யன்மொழியென அக்னியாய் அச்சுறுத்துவோம்... 6.ஆயிரம் வருட சாதிபேயை அறுபது வருட ஆட்சியில் ஏன் ஒழிக்கவில்லை என கேட்டால் அறிவிற்கா என தான் கேட்க தோணும்....அத்தனை நூறாண்டு வாழ்வியலில் வளர்ந்து சமூகமனவியலில் திளைத்துபோன சாதிபேயை அறுபது வருடத்தில் ஒழிக்கவில்லை என கேட்பது முட்டாள்களின் மூர்ச்சை என்றில் வேறேன்ன,,,,,, 7.சாதிசான்றிதழ் தான் சாதியை வளர்க்கிறது என பதரும் பதர்களே.... ஒவ்வொருத்தரின் சான்றிதழ் பார்த்தா சாதியை அறிவீர்கள்.., சாதிமேட்ரிமோனில் வரன் தேடும் போது சாதி கண்டுபிடிக்க முடியவில்லையா... ஊராகும் காலனியாகும் வாழும் மக்களை பார்த்து ஏன் இப்படி என தெரியவில்லையா???சடங்குகளில் சாதி தெரியவில்லையா...... இடஒதுக்கீட்டிற்கு இடறல் செய்யவே சாதிசான்றிதழ் சாதியை வளர்க்கிறது என்பீர் பதர்களே,,, 8.பெண்கள் எல்லாம் இப்படி தான் அல்லது ஆண்கள் எல்லாம் இப்படி தான் என்பது வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல முட்டாள்தனமனாது