Clubhouse logo

Bravebell டிங் டிங்

@bravebell

317

friends

"சிங்கம்" என்று சொன்னவுடன் முதலில் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? 10ல் 9 பேருக்கு அதன் கம்பீரமான பிடரி மயிர் விரிந்த தோற்றம்தான் நினைவில் பளிச்சென்று வரும்... (மீதம் இருக்கும் ஒருவருக்கு சூர்யாவின் மீசை நியாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல). இன்னும் சொல்லப்போனால், சிங்கத்தின் அடையாளமே அதன் பிடரி மயிர்தான். என்னதான் புலி, சிறுத்தை என மற்றவைகளுக்கும் அதன் தனித்துவமான அடையாளங்கள் இருந்தாலும், சிங்கத்தின் பிடரி அதனை தனித்து காட்டுகிறது. பிடரி இல்லாத சிங்கம், மிகவும் சாதாரணமாய், ஒரு பெரிய size பூனைபோல் தான் இருக்கும். அதுமட்டுமல்ல, சிறுத்தைக்கோ, புலிக்கோ அந்த பிடரி மயிரை பொருத்திப்பார்த்தால் கொஞ்சம் சிரிப்பு வருவதுபோல் தான் இருக்கும். பிடரியை பூனைக்கு வைத்துப்பார்ப்பது பூனைக்கு வேண்டுமானால் பெருமைக்குறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அது சிங்கத்துக்கு அவமானமே. சிங்கம் என்றால் பிடரி! பிடரி என்றால் சிங்கம்! அதுப்போலத்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செங்கொடியும், அரிவாள் சுத்தியல் சின்னமும். புலிகள், சிறுத்தைகள், ஏன் பூனைகள் கூட பிடரி மயிரை அணிந்து கொள்ள ஆவலாய் வரலாம். ஆனால், அப்படி பிடரியை அவர்களால் தங்கள் இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. செங்கொடிக்கும், அரிவாள் சுத்தியலுக்கும் தனித்துவமான வரலாறு உண்டு. தியாகம், வீரம் மட்டுமல்ல நியாயங்களுக்கான அர்ப்பணிப்பின் அடையாளங்கள் அவை. அதை கம்யூனிஸ்ட்கள் தவிர வேறு யாரும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது. இது ஒரு புறம் இருக்கட்டும். பிடரி மட்டும்தான் சிங்கத்தின் அடையளமா? சிங்கம் பிடரி இல்லாமல் அசிங்கமாக இருக்கலாம். ஆனால், சிங்கத்தை சிங்கமாக ஆக்குவது அதன் கோரப்பற்களும், கூர்மையான நகங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அதன் பலம், வேகம், மூர்க்ககுணமும் தான். அதெல்லாம், பூனைக்கு கூட ஓரளவு இருக்கும். ஆனால் கழுதைக்கு? திமுக வின் பொதி சுமக்கும் கழுதையாக எப்போதோ மாறிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் இயக்கங்களும் (வெறும் CPI-M ஐ மட்டும் சொல்லவில்லை) எப்போதோ அவற்றின் கோரப்பற்களையும் நகங்களையும் உதிர்த்து கொண்டுவிட்டன. சிங்கம், கழுதையாக உருமாறிய பிறகு அதைப்பார்த்து , பிடரி மயிரையை பன்றிக்கும், நாய்க்கும், எருமைக்கும் ஏன் கொடுத்தாய்? என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது. கழுதைக்கே அது set ஆகாத போது, மற்றவைகள் வைத்திருந்தால் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன? (பிடரி) மயிரா போச்சுன்னு கடந்து போங்கய்யா..